வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

Published Date: April 15, 2025

CATEGORY: CONSTITUENCY

மதுரையில் சமத்துவ நாளையொட்டி ரூ.8.27 கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வழங்கினர்.

அம்பேத்கர் பிறந்த நாள் விழா சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி சென்னையில் நடைபெற்ற விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதிய விடுதி, பள்ளி கட்டிடங்கள், சமுதாய கூடங்கள், கற்றல் கற்பத்தில் அறைகள், ஆயிரம் பழங்குடியினருக்கு வீடுகள் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

அதனைத் தொடர்ந்து மதுரை தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்று 1,164 பயனாளிகளுக்கு ரூபாய் 8.27 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மேலும் இந்நிகழ்வில் கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், மண்டல தலைவர் சரவண புவனேஸ்வரி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

Media: Dinakaran